2023-ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரையில், இந்திய அரசின் கடன் ரூ155.6 லட்சம் கோடியாக உள்ளது.
இந்திய அரசின் கடன் சுமை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன்படி, 2023-ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரையில், இந்திய அரசின் கடன் ரூ155.6 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் கடன் 57.1% ஆக உள்ளது. மாநில அரசுகளின் கடன், மொத்த உற்பத்தியில் சுமார் 28 சதவீதம் ஆகும்.